Super Star!

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

Super Star!

Post by Admin on Tue Mar 11, 2008 9:31 am

' முதலமைச்சர் பதவியை மறுத்த ரஜினிகாந்த் '

காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டால் தமிழக முதலமைச்சர் பதவியை அளிக்க தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்துக்கு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தெரிவித்தும், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக ரஜினிகாந்தின் சுயசரிதை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

' தி நேம் இஸ் ரஜினிகாந்த் ' என்ற பெயரில் எழுதப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் சுயசரிதை புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.

அப்புத்தகத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.கடந்த 1995 ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி முடியும் தருவாயில் , அவரது ஆட்சிக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என கூறியிருந்தார்.

ரஜினி இவ்வாறு பேசியது அவரை அரசியல் சுழலில் இழுத்துவிடும் நிலையை ஏற்படுத்தியது.இந்நிலையில், 1996 ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் , ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட நரசிம்ம ராவ் , தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டால் அவரை முதலமைச்சராக்க காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித தயக்கமும் இல்லை என கூறினார்.

அதற்கு ரஜினிகாந்த் இது குறித்து யோசிக்க தமக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து தாம் சென்னை வரும்போது நேரில் சந்தித்துப் பேசலாம் என நரசிம்ம ராவ் கூற , அதன்படியே சென்னை சத்திய மூர்த்தி பவனில் இருவரும் சந்தித்துப் பேசினர்.

அப்போது நரசிம்ம ராவின் கோரிக்கையை ஏற்க மறுத்த ரஜினிகாந்த் , ஜி.கே. மூப்பனாருக்கு அப்பதவியை அளிக்குமாறு கூறியுள்ளார்.

" அதே சமயம் திமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது செய்யும் ஒருவரை அப்பதவியில் நியமிக்க பரிசீலியுங்கள் ; ஆனால் திமுகவுடன் கங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன்.இந்த முறை திமுகவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என நான் கருதுகிறேன் " என ரஜினி அப்போது கூறியதாக அந்த புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source :http://in.tamil.yahoo.com/News/Regional/0803/10/1080310048_1.htm

Regards
Admin

Admin
Admin

Posts: 95
Join date: 2007-12-02

View user profile http://techportal.htmotion.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum