Information Part3
Page 1 of 1 • Share •
Information Part3
ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை!
நோயாளிக்கு வலி குறையும் விதமாகவும், இரத்தம் விரயமாவதைத் தடுக்கும் விதமாகவும் ரோபோ உதவியுடன் சென்னை மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஜனவரி முதல் வாரத்தில், இருதயத்தில் ஓட்டை உள்ள 25 வயது இளைஞர் ஒருவருக்கும், 28 வயதான இளைஞர் ஒருவருக்கு இடது ஆட்ரியோவென்ட்ரிகுலர் வால்வு மாற்றும் அறுவை சிகிச்சையையும் சென்னை, செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின்போது, குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரயம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.
இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவி குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அறுவை சிகிச்சையின் போது அதிகமான அளவில் திசுக்களை சேதப்படுத்துவது இல்லை. எனவே வலி குறைவு. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் ஏற்படும் வடுவும் குறைவு. சிறிது காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும் போது ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் வடுக்கள் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
திறந்த நிலை அறுவை சிகிச்சையின் போது 20 சென்டி மீட்டர் அளவுக்கு உடல் பகுதியில் கீறுவதற்கு பதிலாக இம்முறையில் 4 சென்டி மீட்டர் அளவுக்கு உடலைக் கீறினால் போதுமானது.
குறைந்த வலி, இரத்தப்போக்கு, புண், திசு சேதமே ஏற்படுவதால் இந்த முறை அறுவை சிகிச்சையை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பெரும்பாலான நோயாளிகளால் விரும்பப்படுவதாகவும் மருத்துவர் ரவி குமார் கூறியுள்ளார்.
Regards
Admin

Admin- Admin
- Posts: 95
Join date: 2007-12-02

Permissions of this forum:
You cannot reply to topics in this forum